Friday, October 6, 2017

கவிநாடு மரபு நடையின் போது குழுவினரால் மீட்கப்பட்ட சமணர் சிலை 2013 லேயே கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த வாரம் தொடர்பயணம் என்றாலும் சனிக்கிழமை 30/09/2017 அன்று மரபு நடை நிகழ்வை திட்டமிட்டப்படி நடத்த வேண்டும் என்று புதுகை செல்வா உறுதிபடக்கூறவே நானும் தலையாட்டினேன்,கரு.ராசேந்திரன் அய்யாவிற்கு மரபு நடை தகவலை பகிர்ந்துவிட்டு ஏனைய தகவல் பரிமாற்றங்களை கட்செவி வழியாகவே தெரியப்படுத்தினோம்.
பத்திரிக்கை நண்பர்களின் குழுக்களில் தகவல் பரிமாறப்பட்டது.
பயணம் காலை 6.30 என்று திட்டமிடப்பட்டு போதுமான பங்கேற்பாளர்கள் வருவதற்காக காத்திருப்பு படலம் தொடர,அடிக்கடி தமது வரவை உறுதி செய்து வந்தார் புதிய தலைமுறை புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் முத்துப்பழம் பதி,அதோடு நின்று விடாமல் தமது காமிரா கருவியோடு உதவியாளரை அனுப்பி சம நேர தொடக்க நிகழ்வுகளை பதிவு செய்திட கேட்டுக்கொண்டார்..

அடுத்தடுத்து எண்ணிக்கை உயர்ந்து 32 ஆக உயர்ந்தது மேலும் பத்து நிமிட காத்திருப்பில் 50 ஆக உயர பயணம் தொடங்கியது,

பயணத்தின் தொடக்கத்தில் உள்ள நீர் போக்கு கலிங்கு குறித்த இராஜராஜ சோழரின் கல்வெட்டை தேட தரையடுக்கில் கித்தப்பட்ட அந்த கல்வெட்டை ராசேந்திரன் அய்யா படித்து காட்ட உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக்கொண்டது,மேலும் வந்தவர்கள் தமிழர் பெருமையை தத்தமது கோணத்தில் சொல்ல ஆரம்பித்தனர்.
ஆனால் அங்கே உடைந்து விரவிக்கிடந்த கண்ணாடி போத்தல்களின் கூரிய முனைகள் தற்கால வாழ்வியலை நினைத்து வருத்தமுற செய்தது.
பயணம் தொடர கரு.ராசேந்திரன் அய்யா இங்கே ஒரு சமணர் சிலை கிடக்கு நல்லா தேடுங்க....வந்திருந்த குழுவினரிடம் கூற அனைவரும் தேட உடற்பகுதி கிடந்த இடத்திலிருந்து 40 அடித்தொலைவில் சமணர் தலை கிடைத்தது....
அப்போது இந்த சிலையை கண்டறிந்த வரலாற்றை பதிவு செய்ய இதை முதலில் புத்தர் என்று பேராசியர் திரு.சந்திரபோஸ் அவர்கள் பத்திரிக்கை செய்தி வெளியிட இப்பகுதியில் பல புத்த, சமண சிலைகளை கண்டுபிடித்து வெளிப்படுத்திய முன்னாள் தமிழ்  பல்கலைக்கழக முன்னாள் கண்காணிப்பாளர் அய்யா திரு.ஜம்பு லிங்கம் அவர்கள் மேலாய்வு செய்ய திரு.சந்திரபோஸ் அவர்களோடு மூன்று நாட்களுக்குள்ளாக சிலையை பார்க்க வந்த போது தலையைக்காணவில்லை இதனைத்தொடர்ந்து சில நுட்பமான வேறுபாடுகளை ஆய்ந்த ஆய்வாளர் உடற்பகுதியை மட்டும் வைத்து இது சமணர் சிலை என்ற முடிவுக்கு வந்தார் மேலும் இது குறித்த செய்தியையும் பத்திரிக்கைகளில் வெளிப்படுத்தினார். இதன் மூலம் கவிநாடு கண்மாயில் கண்டறிந்த சிலை சமணர் என்பது உறுதி செய்யப்பட்டது...

இந்நிலையில்தான் நமது மரபு நடை
கள ஆய்வில் தொலைந்த சமணர் சிலையின் தலை மீட்கப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வந்த பத்திரிக்கை செய்திகள் மீட்டெடுப்பு என்பதற்கு பதிலாக  கண்டுபிடிப்பு என்று வந்துள்ளன.
அது மட்டுமின்றி செய்தி ஊடகங்களில் கண்டெடுப்பு என்ற தகவலை மாற்றியமைத்து வெளியிடவும் அன்று மாலையே கட்செவி (அன்று மாலை  2.30 மணிக்கு வயலோகம் சென்று விட்டபடியால் நக்கீரன் பத்திரிக்கையாளர் தரு.பகத்சிங் வாயிலாக அனைத்து பத்திரிக்கையாளர்கள் குழுவிற்கும் தகவல் பகிரப்பட்டது) மற்றும் கைபேசி வாயிலாகவும் கேட்டுக்கொண்டதைத்தொடர்ந்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவை என்பதை வெளிப்படுத்தியிருந்தன...மேலும் ஆய்வாளர் அய்யா ஜம்புநாதன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்தியிருந்து எங்களது குழுவிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம் ...
அது மட்டுமின்றி இந்த சமணர் சிலையை மீட்டு ஒப்படைப்பதற்கான பணியை மட்டுமே தொடக்கியுள்ளோம்.
முதற்கட்டமாக தலைப்பகுதியை மட்டும் ஒப்படைத்துள்ளோம்...இனி உடற்பகுதி துண்டுகளையும் ஒப்படைக்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம்...
இந்த சமணர் சிலையை கண்டுபிடித்து வெளிப்படுத்திய அய்யா பேரா.திரு சந்திரபோஸ் அவர்களுக்கும் அய்யா ஜம்புலிங்கம் அவர்களுக்கும்,தலைப்பகுதியை தேடி அடையாளப்படுத்திய குழுவினருக்கு நன்றிகள் கோடி....

 நன்றி
அடுத்த களத்தில்
சந்திப்போம்
நிறுவனர் ஆ.மணிகண்டன்
தலைவர் கரு.ராசேந்திரன்

மரபுநடை ஒருங்கிணைப்பாளர்கள்:
கஸ்தூரிரெங்கன்
புதுகை செல்வா





தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....