Showing posts with label மணிகண்டன். Show all posts
Showing posts with label மணிகண்டன். Show all posts

Sunday, September 5, 2021

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி

     
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு  அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம் , தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.


கல்வெட்டின் சிறப்பு     

   

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22
வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக்கொண்டது.


           தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் .

 

நன்றியுடன்

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்

 

Saturday, September 2, 2017

கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டிபட்டியில் இராசராசனின் முப்பாட்டனான பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை அருகே நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள

வீமன்குளத்தின் கரையில் சில மாதங்களுக்கு முன்பு நீர்வரத்து  பாலம் அமைக்கும் 

பணி நடந்துள்ளது. அப்போது சில முழு உருவ கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. 

இது குறித்து தொல்லியல் ஆய்வுக்கழகத்திற்கு மங்கனூர் பிரதீப் , நண்டம்பட்டி ஸ்டாலின் ஆகியோர்  தகவல் தெரிவித்தனர்.இதனைத்தொடர்ந்து தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் இராசேந்தின், நிறுவனர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உறுப்பினர் பூங்குடி ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான கற்சிற்பங்களும் ,பராந்தகசோழன் ஆட்சியைக்குறிக்கும் கல்வெட்டும், கற்றளிக்கோவிலின் கற்கலசமும், ஆவுடையும் அடையாளம் காணப்பட்டது. மேலும் இதேபகுதியின் சற்று அருகில் சமணதீர்த்தங்கரர் கற்சிற்பமும் கண்பிடிக்கப்பட்டுள்ளது.


கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடம்


புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி  புதுக்கோட்டை மாவட்டம் செங்களூர் ஊராட்சியிலும், மற்றொரு பகுதி  தஞ்சாவூர் மாவட்டம்  புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது. இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில் ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் விரவி கிடக்கின்றன. இதே பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே கட்டுமானக்குவியல்களும், செங்கற்களும் காணமுடிகிறது.

கற்றளி கோயில்


அடித்தளம் முதல் கலசம் வரை முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளிக்கோவில் வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. இது முற்கால சோழர் கலைப்பாணியில் கோயில் கட்டுமான மரபுகளை பின்பற்றி கட்டப்பட்டிருப்பதை புதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட விமான கற்கலசம் , தூண்கள், மற்றும்  தூண்களை தாங்கிப்பிடிக்கும் வகையில் அடித்தளமாக அமைக்கப்பட்ட இரண்டு அடி உயரமுள்ள வட்டவடிவிலான உருளைக்கற்கள் , கோவிலின் விமானத்தின் புறச்சுவர் விளிம்புகளில் அமைக்கப்பட்ட குரங்கு மற்றும் தேவகணங்களின் உடைந்த தலைப்பகுதிகள் ஆகியவற்றின்  மூலம் இவ்விடத்தில் ஒரு முழுமையான கற்றளிக்கோவில் இருந்துள்ளதை உறுதிபடுத்த முடிகிறது




கற்றளியின் காலம்


கட்டுமானப்பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஆதாரமாகக்கொண்டு மதிரை கொண்ட கோப்பரகேசரியான பராந்தகன் ஆட்சி செய்த கி.பி 907 முதல் 950 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுப்பியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிந்தாலும் இங்கே காணப்படும் சிற்பங்கள் குறிப்பாக முருகன் , கௌமாரி உள்ளிட்ட சிற்பங்கள் காலத்தால் முந்தையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனில் இக்கற்றளி இதற்கு முன்பே கட்டமைக்கப்பட்டு அதன் பிறகு கட்டுமானங்களை நீட்டிருத்திருக்கவும் வாய்ப்புள்ளது.



அடையாளம் காணப்பட்ட கற்சிற்பங்களும் காலமும்



தமிழர்களின் தாய்வழிச்சமூகத்தின் அடையாளமான முற்கால சோழர் கலைப்பாணியிலான தவ்வை,மாந்தன் , மாந்தி சிற்பம் , அமர்ந்த நிலையில் பல்லவர் கலைப்பாணியிலான  முருகன் சிற்பங்கள் இரண்டும்,சப்த கன்னியரில் ஒருவரான கௌமாரி சிற்பமும்,முற்கால சோழர் கலைப்பாணியில் உமையாளை மடியமர்த்திய நிலையில் சிவனார் சிற்பம் ஒன்றும், தரையில் கையூன்றிய நிலையில் தேவியாரை சாந்தமாக்கும் தம்பதி சகிதமான சிவனார் சிற்பமும், கையில் வில்தாங்கிய நிலையில் பிச்சாடனார் சிற்பமும், மிக நேர்த்தியான வடிவில் பிரம்மா சிற்பமும், முகம் சிதைந்த சண்டிகேசுவரர் சிற்பமும், உடல் இல்லாத நிலையில் இடுப்பிலிருந்து பாதம் வரை காணப்படும் பைரவர் சிற்பமும், மிக நேர்த்தியான அய்யனார் சிற்பமும், நின்ற நிலையில் பார்வதியார் சிற்பமும், நான்கு அடி நீளம் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிற்பங்களும், தாமரை இதழ் வடிவில் அமைக்கப்பட்ட ஆவுடையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மண்ணில் புதைந்த நிலையில் முட்புதர்களுக்குள்ளாக ஏராளமான சிற்பங்கள் இருப்பதை அனுமானிக்க முடிகிறது.


சமண தீர்த்தங்கரர் சிற்பம்


தியான கோலத்தில் சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும் இக்கோவில் கட்டுமானங்கள்  கண்டறியப்பட்டுள்ள பகுதிக்கும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமணப்பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் சமணமும் சைவமும் பரவி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது.



இராசராசனின் முப்பாட்டன் பராந்தக சோழன் கல்வெட்டு


கோயில் கட்டுமானப்பகுதிக்கு மிக அருகில் உள்ள வயல்வெளியில் காணப்படும் கல்வெட்டில் மங்கல வரியுடன்


“மதிரைகொண்ட கோப்பரகே(சரி) ..... மியானலூர்ளக்ய மல்ல முத்தரையனினு....” என்ற செய்தியடங்கிய துண்டு கல்வெட்டு கிடைத்திருப்பதன் மூலம் இராசராசனின் முப்பாட்டனான மதிரைகொண்ட கோப்பரகேசரி என்ற பட்டப்பெயருடன்  வழங்கப்பட்ட பராந்தக சோழன் காலத்தில் மியானலூர்ளக்ய மல்ல முத்தரையன் என்பவர் இக்கற்றளியை எழுப்பிருக்கக்கூடும் அல்லது இக்கோவிலை புனரமைத்திருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.



இந்தக்கள ஆய்வில் மங்கனூர் சுதிவர்மன் , கிள்ளுக்கோட்டை லெட்சுமணன்.  நண்டம்பட்டி கிராமத்தைச்சேர்ந்த இளைஞர்கள்  சூரியமூர்த்தி, ரஜினி, ஜான், வடிவேல்,பிரேம்குமார், டேவிட், ஜெயசீலன்,வடிவேல் கௌதம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.









Saturday, November 19, 2016

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து உலக மரபு வார விழாவை நார்த்தாமலையில் கொண்டாடியது

உலகின் பல்வேறு இடங்களிலும் உலக மரபு வாரம் நவம்பர் 19  முதல் நவம்பர்  25  வரை  பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 












இந்நிகழ்வு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து இவ்விழாவை  நார்த்தாமலை கடம்பர் கோவில் அருகே கொண்டாடியது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலைப்பனையூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் .புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனத்தலைவர் வெ.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகள் , ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்தியப்பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை இளந்தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியோடு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில்  மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, தொழிநுட்பம், நீர்பாசன முறைகள், கலை மற்றும் வழிபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நார்த்தாமலை விசையாலய சோழீஸ்வரத்தில் கல்வெட்டு படியெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் வழங்கினார். இறுதியாக  மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஸ்தான் பகுருதீன் நன்றி கூறினார்.





புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து உலக மரபு வார விழாவை நார்த்தாமலையில் கொண்டாடியது

உலகின் பல்வேறு இடங்களிலும் உலக மரபு வாரம் நவம்பர் 19  முதல் நவம்பர்  25  வரை  பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 












இந்நிகழ்வு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து இவ்விழாவை  நார்த்தாமலை கடம்பர் கோவில் அருகே கொண்டாடியது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலைப்பனையூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் .புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனத்தலைவர் வெ.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகள் , ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்தியப்பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை இளந்தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியோடு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில்  மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, தொழிநுட்பம், நீர்பாசன முறைகள், கலை மற்றும் வழிபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நார்த்தாமலை விசையாலய சோழீஸ்வரத்தில் கல்வெட்டு படியெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் வழங்கினார். இறுதியாக  மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஸ்தான் பகுருதீன் நன்றி கூறினார்.





Wednesday, October 26, 2016

உலகம் முழுவதும் ஒரே மொழி பேசப்பட்டதற்கான சான்று – புதுக்கோட்டை அருகே கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்லுனி ஆறு என்று என்று தற்போது அழைக்கபடும் ஆறு உள்ளது இதன் கரையோரப்பகுதி அமபலத்தான் மேடு என்ற பழமையான வாழிடம் உள்ளது. இவ்விடம் குறித்த தகவலை  நக்கீரன்  பத்திரிக்கையாளர் பகத்சிங் அளித்த தகவலின் அடிப்படையில்  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் , தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் , தலைமை ஆசிரியர் வீர சந்திரசேகரன் ,இளையராஜா , சமூக ஆர்வலர் மதியழகன் ஆகியோர் அடங்கிய   குழு கள ஆய்வு மேற்கொண்டதில் மிக அபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல்
வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் ராமசாமிபுரம் மங்கலநாடு ஆகிய ஊர்களின் கிராம எல்லையில் 173  ஏக்கர் பரப்பளவில்  இத்திடல் அமைந்துள்ளது இதில் பாலை நிலத்தாவரங்களான வன்னி மரங்கள் , அஸ்பராகஸ், கற்றாழை , சப்பாத்திக்கள்ளி உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் முட்புதர்காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக உருக்குக்கழிவுகளும் உலோக வார்ப்பு மண் உருளைகளும்,கண்ணாடி கற்களும்  ஒருசில இடங்களில் காணப்படுகிறது .


வில்வன்னி ஆறு (வில்லுன்னி ஆறு) வரலாறு
இது மறமடக்கி குளத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது ருத்திரசிந்தாமணி எனுமிடத்தில் அம்புலி ஆறுடன் கிளை ஆறாக இணைகிறது 37  வது கிலோ மீட்டரில் வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது கலக்கும் இடத்தில் உள்ள ஊரின் பெயர் வில்லுனிவயல் என வழங்கப்படுவதன் மூலம் அம்புலி ஆறு என்ற பெயர் வழங்கப்படுவதற்கு முன்பே வில்லுனி ஆறு என்ற பெயரே வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என உறுதிபடுத்த முடிகிறது. தற்போது வில்லுன்னி  ஆறு என்ற பெயர் பண்டைய இலக்கியத்தரவுகளின் அடிப்படையிலும் தற்போது வரை  ஆற்றின் கரையில் மிகுந்து காணப்படும் வன்னி மரங்களையும் ஒப்புநோக்கும் போது வில்வன்னி ஆறு என்ற பெயரே சொல்வழக்கில் திரிபடைந்து வில்லுன்னி ஆறு என மாறியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.
வன்னி மரமும் தாய்தெய்வ வழிபாடும்
இந்த மரம் பற்றிய செய்தி  ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன. கல்கத்தாவிலும் ஏனைய மாநிலங்களிலும் விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதையும் அதே விழாவின் பின்னணியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் 'பாரிவேட்டை' என்ற பெயரில்  திருவிழா நடப்பதையும் இவ்விழாவில் வன்னி மரத்தின் கீழ் நின்று வில் எய்தும் விழா  கொண்டாடப்பட்டு வந்தததையும் சான்றுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் வழியாக இந்தியா முழுவதுமாக தாய்தெய்வ வழிபாட்டு முறையும் வன்னி மரத்தின் தொடர்பையும் அறிய முடிகிறது.
தாழி புதையிடமும் இலக்கிய தொடர்பும்
"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே"என்று பதிற்றுபத்து பாடல் வன்னி மறக்காட்டிற்கும் தாழி புதைக்கப்படும் இடத்திற்கும் உள்ள தொடர்பை கூறுகிறது.
"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே      என்று நற்றிணையின் 271 பாடல் தாழி குறித்த குறிப்பு தருகிறது. 
பானைக்குறியீடுகள் சொல்ல வருவது என்ன?
வடிவெழுத்து பெயரெழுத்து முடிவெழுத்து தன்மையெழுத்தென எழுத்தின் பெயர் இயம்பினரே என்று நிகண்டுகளில் ஒன்றான திவாகர நிகண்டு எழுத்தின் பரிணாம வளர்ச்சியை கூறியிருப்பதும் அதையே  இன்று தொல்லியல் அறிஞர்களால் வறையறுக்கப்பட்டுள்ள படவுருவன்(PICTO GRAPH),சொல்லுருவன்(LOGO GRAPH), உயிர்மெய்யன்(SYLLABARY), ஒலியெழுத்து(PHONETIC) என்று  குறிப்பிடுவதையும் ஒப்பு நோக்கும்போது தமிழின் எழுத்துவகைகளை நமது முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும் நாம் அறிய முடிகிறது
மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமது செய்தி யாருக்கோ தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில் அக்காலத்தில் இருந்த நடைமுறையிலிருந்த எழுத்துக்களை பயன்படுத்தி எழுதி வைத்துள்ளதை நாம் கீரல் குறியீடுகள்  என்கிறோம், இத்தகைய குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒற்றை குறியீட்டில் வெளிப்படுத்தியிருப்பதை நாம் உணரமுடிகிறது. நமக்கு கிடைத்துள்ள குறியீடுகளில் மூவுலகை குறிப்பதாகவும், இவை அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் ஒற்றை சக்தியை நோக்கி இவர்களது உயிர் பயணிப்பதாகவும்,அருகாமையில் இருக்கும் ஏணி போன்ற அமைப்பு மேற்பகுதியில் குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகன்றும் இருப்பதன் மூலம் அதி உயரத்திற்கு இவர்களது பயணம் இருப்பதாய் இவர்கள் கற்பனை செய்திருக்க வேண்டும் என அனுமானிக்க முடிகிறது.மேலும் இக்கருத்தை "கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி"
என்று புறநானூற்றின் 228 செய்யுள் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.
முதல் இரண்டு குறியீடுகள் ஒலிநிலையை (Phonetic) குறிப்பதாகவும் அதோடு பக்கவாட்டில் கீறப்பட்டுள்ள மூன்றாவதாகவுள்ள  படிநிலை நீள் கூம்புவடிவக்குறியீடு படவுருவன்(Pictograph) வகையைச்சார்ந்ததாகவும் உள்ளது.
இந்தக்குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார் என்பதை குறிப்பதாக கிரேக்க தொல்லியலாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தியத்தொல்லியலாளர்களின் பெருவாரியானவர்கள் இக்குறியீட்டை மட்பாண்டம் செய்பவரின் அடையாளம் என்று கூறிவரும் நிலையில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், மற்றும் இந்தியாவின் பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக்கொண்டும்  இதனை உலகலாவிய மொழிக்குறியீடாகவே பார்க்கவேண்டியுள்ளது. மேலும் மண் அடுக்கைமட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின் காலக்கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது என்பதால் அறிவியல் அடைப்படையில் மொழித்தோற்றத்தை முன்வரைவு செய்ய தொல்லியலாளர்கள முன்வரவேண்டும்.
அறிவியல்பூர்வமாக இதனை ஒப்புநோக்கும்போது தலைகீழாக அமைக்கப்பட்டுள்ள முன்னோடி கருத்தெழுத்து பூமி,நீர்,காற்று ஆகிய உணரக்கூடிய பொருட்கள் ஒருங்கிணைந்து ஒளி,வெப்பம் எனும் ஒருகமைந்த நிலையாக இந்த உடல் மாறியதை வெளிப்படுத்தியிருக்கும் குறியீடாகவும் இதனை கருதலாம்.
தொல்லியல் பார்வையில் அம்பலத்திடல்
அம்பலத்திடலில் கருப்பு வெள்ளை பானை ஓடுகளும் கருப்பு ஓடுகளும், தாழியின் பெரிய பாண்ட ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
ஏ.சுந்தரா என்பவர் பெருங்கற்படை அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகள் 3000 – 4000 வருடம் வரை இருந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும் இத்தகைய குறியீடுகளை பின்னர் தமிழியாக வளர்ச்சியடைந்திருக்கும் என்கிறார்.
தமிழகத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட கரூர், உறையூர்,அழகன்குளம்,வல்லம்,கொடுமணல்,ஆகிய ஊர்களின் கீழ் அடுக்கில் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகளும், இரண்டாம் அடுக்கில் தமிழி  எழுத்துக்களும் பொறித்தவையாக உள்ளன. இதன் மூலமாக  இக்கீரல்களை எழுத்தின் முன்னோடி அடையாளம் என அறியலாம்.
அதுமட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் செம்பியன் கண்டியூரில் கிடைத்த பானைக்குறியீடுகள் இங்கு கிடைத்த பானைக்குறியீடுகளோடு முழுமையாக ஒத்துபோகிறது. மூன்று கோடுகள் இணையும் கூம்பு வடிவக்குறியீடு அதிக அளவிலும், கூம்பு வடிவ படிநிலை குறியீடு இவற்றோடு இணைத்து வரையப்பட்டுள்ளதன் மூலம் இதனைக்குறியீடாகவோ அல்லது கூட்டுப்பொருள் கருத்து வெளிப்பாடாகவோ கருதலாம்.

குறியீட்டின் காலம்
இந்த குறியீட்டு எழுத்துகள் ,  எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும் பெருங்கற்கால குறியீடாக வரையறுக்கப்பட்டுள்ளதாலும்  இந்தக்குறியீடுகளை 3500  ஆண்டுகளுக்கு மேம்பட்டவையாகவே கருத வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு முழுமையாக கிடைத்துள்ளதால் இந்தக்குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனைமூலமாக ஓரளவு துல்லியமாக வெளிப்படுத்த முடியும் மேலும் வெப்ப ஒளிர்ம சோதனைகள் (thermo lominiscence dating) உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான கால வரையறைக்கு வர முடியும் ,  இந்நிலையில்  எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளைகேகொண்டு தொடர் ஆய்வுகளையும், மேற்கொண்டு வருகிறோம் .



அம்பலத்திடல் பகுதியில் தொல்லியல் தடயங்கள்

எமது குழுவினரால் இதே பகுதியில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் புதிர் அமைப்புகள், இதில் சுண்ணாம்பு கற்காரையுடன் கூடிய தரைத்தளம், சுடாத மண் உருளைகள் மற்றும் சுண்ணாம்பு கற்காரை கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது இது தொடர்பாக தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது நமது அமைப்பு

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...