Sunday, November 4, 2018

இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை ஆசிரியர்களுக்கு கொடும்பாளூர் முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியில் இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட  ஆசிரியர்களுக்கு மூன்று நாள் கலை மற்றும் பண்பாட்டு பயிற்சி புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் மாவட்டக்கருத்தாளர் சந்திர சேகரன் ஒருங்கிணைப்பில் நடந்தது.

 இரண்டாம் நாள் பயிற்சிக்கு சிறப்பு கருத்தாளர்களாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர்  கரு.ராஜேந்திரன் , நிறுவனர் ஆ.மணிகண்டன் பங்கேற்று  கொடும்பாளூர் மூவர் கோவில், ஐவர் கோவில் ,இதில்  முதுகுன்ற முடையார் கோவில் ஆகிய இடங்களின் வரலாற்று பின்னணிகள பகிர்ந்துகொண்டனர்.

முதுகுன்ற முடையார் கோவிலில் நடந்த பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக மறைந்து கிடந்த இரண்டு துண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க மூவர் கோவில் பூதி விக்கிரம கேசரியாலும், முது குன்ற முடையார்ப் என கல்வெட்டுகளில் உள்ள முசுகுந்தேஸ்வரர் கோவில் மகிமாலைய இருக்கு வேள் என்பவரால் முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்டது, அது மட்டுமின்றி மணிக்கிராமம் எனும் வணிகக்குழுவின் தலைநகராக விளங்கிய கொடும்பாளூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும், இவ்வூரில் பல நூற்றுக்கணக்கான வரலாற்று சான்றுகள இன்னும் அறியப்படாமலேயே உள்ளன, அவற்றின் ஒரு பகுதியாக  இரண்டு கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் மங்கல வரியுடன் “கோப்பரகேசரி பந்மரான சக்கரவத்திகள் குலோத்துங்க சோழ தேவற்குயாண்டு 17 ஆவது (இரட்டைபாடி கொண்ட சோழ வள நாட்டு” என்று குலோத்துங்க சோழரின் பதினேழாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட முற்று பெறாத துண்டு கல்வெட்டும், கொற்றக்குடைப்பன்மமை முந்நூற்றுவரும் பக்கல் ...வலப்பாடி நிலத்துள் கரைக்கிழச்செய்யும் வே(லை)  என்று பொறிக்கப்பட்ட வணிகக்குழுவின் கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.





2 comments:

  1. சிலையின் படம் மட்டும் உள்ளதே? மேற்கொண்டு விவரங்களை அறிய ஆவலாகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. Titanium Auto Sales
    This ford fiesta titanium service was in constant good use. hypoallergenic titanium earrings This service was titanium bikes in constant titanium body armor good use. In fact, babyliss pro nano titanium straightener we would often contact them about anything. Their website was built to take the

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....