Sunday, August 23, 2020

மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வடபுறமுள்ள விவசாய நிலத்தில் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு .

 

மங்களாகோவில் மகாவீரர் சிற்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் ,  மங்களாகோவில் கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பிள்ளையார் குள கரைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் சமண சிற்பம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் அவ்வூர் மக்களால் அய்யனார், காளி என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிற்பம் குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகி உ. அரசப்பன் அளித்த தகவலைத்தொடர்ந்து நமது கள ஆய்வில் கீழ்க்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமணர் சிற்பம் ஒன்றரை அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன்,  நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று  தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.  விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது .

 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையம் தெளிவற்று சிதைந்தும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்   முக்குடை சிதைந்துள்ளதால் தெளிவற்று இரண்டு குடைபோல தோற்றமளிக்கிறது, பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,  இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பதினொன்றாம்  நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.  

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ,  கறம்பக்குடி, திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,

அக்கினி ஆறானது மிகப்பழமையானதாகும், இது  அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும், ஆற்றின் பெயரும் சமணக்கொள்கையோடு  தொடர்புடன் இருப்பதையும், சமண சமயம் செழித்திருந்த ஆற்றுப்படுகையாக இருந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  

மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் கந்தர்வகோட்டை கீழ வாண்டான் விடுதி சிவனார் திடல் என்ற சமணர் திடலில் செங்கல் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும் , நான்கரை அடி உயரமுடைய சமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மங்களாகோவில் சமணர் சிற்பமும் அவ்விடத்திற்கு மிக அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர், வைத்துக்கோவில், பெருங்களூர்  உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் சமணப்பள்ளிகள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் வலுசேர்க்கும் சான்றுகளாக உள்ளது. 

இந்த களப்பணியின் போது வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ராஜேஷ், தி.மாதரசு, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  க.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது மகாவீரர் சிற்பம் கந்தர்வகோட்டை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு கந்தர்வகோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.




 

 

 

 

Monday, July 6, 2020

தமிழகத்தில் 2200 ஆண்டுகளாக தொடரும் சித்தர் மரபு - தமிழிக்கல்வெட்டு சான்று, ஒரு பார்வை

ஆ.மணிகண்டன் , வே.ராஜகுரு 

கிண்ணி மங்கலம் சித்தர் மரபு  :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்களுக்கு கல்விகலைமருத்துவம்வானவியல்ரசவாதம்போர்ப்பயிற்சிராஜதந்திரங்கள்ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் போதித்து, பரம்பரையாக 66 குருமார்களையும் இதே இடத்தில் சமாதியாக்கி வந்திருக்கின்றனர். தற்போது குருகுலத்தில் 67 ஆவது குருவாக திரு. அருளானந்த சுவாமிகள் உள்ளார்.

முன்னோர்களை சமாதி ஆக்கும் போது லிங்கம் வைத்து பள்ளிப்படை ஆக்குவதும் அவர்களை அந்த உருவிலேயே வணங்கி வருவதும் மரபுஅதனை தொடர்கிறார்கள். சங்க காலத்தில் எவ்வாறு குருகுலம் செயல்பட்டு வந்ததோ அதே போன்று இன்றளவும் கட்டணமின்றி  மக்களுக்கு கல்விகலை மற்றும் தொழில் நுணுக்கங்களைபோர்த் தந்திரங்களை உள்ளிட்ட தமிழர் கலைகளை கற்றுத்தரும் மையமாக உள்ளது.

கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த அறிமுகம் :

கிண்ணி மங்கலம் தமிழிக்கல்வெட்டை மரபு ஆர்வலர்கள் திரு ச.ஆனந்தன் ,திரு. இரா. இராஜவேல், பாறை ஓவிய ஆய்வாளர் திரு. காந்திராஜன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெட்டு அமைந்துள்ள இடம் : 

 கல்வெட்டு மதுரை கிண்ணிமங்கலத்தில் கிடைத்திருக்கும் தமிழிக் கல்வெட்டு மதுரைக்கு மேற்கில் சுமார் 20 கிமீ தொலைவில் செக்காணூரணி திருமங்கலம் சாலையில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் ஏகநாதன் குருகுல வளாகத்தில் உள்ளது.


 


கல்வெட்டின் காலம் :.

எழுத்து வடிவத்தைக் கொண்டு கிமு. மூன்றாம் நூற்றாண்டாகக் கணிக்க வாய்ப்புண்டு என கல்வெட்டை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டு :

 கல் தூணில் தமிழி கல்வெட்டு கிடைத்திருப்பது இதுவே முதல்முறை, தமிழி கல்வெட்டு 26 செ.மீ அகலமும் 56 செ.மீ உயரமும்நான்முகத்துப் பாதமும், அறுபட்டைத் கம்புப்பகுதியும் கொண்ட கொண்ட தூண். அறுபட்டை ஆரம்பிக்கும் இடத்தில் மூன்று முகமுத்திலும் முதல் வரியில் ஏ க ன் ஆ த ன்” எனவும் இரண்டாவது வரியாக கோ ட் ட ம்” என உள்ளது.

 மடத்தில் கிடக்கும் மற்றொரு கல்வெட்டு ஒரு அடி நீள அகலம் கொண்டது. கருங்கல்லின் முகப்புப் பகுதியில் இறையிலியாக ஏகநாதன் பள்ளிப்படை மண்டளி யீந்தார்

என்ற வாசகம் ஐந்து வரிகளாகப் பொறிக்கப் பட்டுள்ளது. நன்காவது வரி முடிவில் பாண்டியர் சின்னமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியில் கிண்ண வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.

       


 சித்தர் மரபின் சிறப்பு :

 தமிழர் வாழ்வியல் வரலாற்றில் இந்த தமிழிக்கல்வெட்டு புதிய பரிமாணத்தை தரவல்லது. பல்வேறு பண்பாட்டு முடிச்சுகளை அவிழ்த்திருக்கிறது. இந்தக்கல்வெட்டு வாசிக்கப்படுவதற்கு முன்னதாகவே இந்த கல்வெட்டில் ஏகநாதன் கோட்டம் என்ற செய்தி பொறிப்பு உள்ளது என 67 ஆவது சித்த மடத்தலைவர் அருளானந்தம் கூறிய செய்தி,  கல்வெட்டிலும் அப்படியே பொறிக்கப்பட்டிருந்தது, கல்வெட்டை வெளிப்படுத்திய தொல்லியல் ஆர்வலர்களுக்கு வியப்பை தந்துள்ளது. 

    இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம்’ என எழுதப்பட்டுள்ளது குறித்து கல்வெட்டின் எழுத்துருக்களை வாசிக்கத்தெரியாத மடத்தின் சித்தர் எப்படி கூற முடியும் , அதற்கு அந்த சித்தரின் பதில் இங்குள்ள ஒவ்வொரு பொருட்களையும் பற்றிய தகவல் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது, என்கிறார்.

    எனில் 16 வகையான கலைகள் கற்றுத்தரப்படுவதுபோல  சுமார் இராண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டில் உள்ள செய்தி வரை செவி வழி கற்பித்தலாக சித்தர் வழி மரபுக்கு  கடத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

   இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கும் மருத்துவ சாலை , கல்விச்சாலை , சித்தர் மரபு , போர்க்கலை பயிற்சி மையம் இதுவே எனும்போது பிரமிப்பாக உள்ளது.

முன்னோர் வழிபாடும் வளர்ச்சியும் :

    உலகலாவிய பண்பாட்டு மரபைப் பொறுத்தவரையில், முன்னோர்களை வழிபடும் முறைதான் முந்தி நிற்கிறதுஅதே  அடிப்படையில் தமிழகத்திலும் மூன்னோர்  வழிபாட்டு முறைதான் பின்னாளில் கோயில் கட்டுமானத்திற்கான அடிப்படை என்பதை விளக்குகிற விதத்தில்,  தமிழர் வரலாற்றில் கல்வெட்டு சான்றுடன் கூடிய ஒரு தொடர் சந்ததியாக இங்கு வசிப்பவர்களையும் அவர்களின் முன்னோர்களையும் நாம் கருதலாம்.

இராண்டாயிரம் ஆண்டு மரபும் , கல்வெட்டு சான்றும்     

இந்திய அளவில் பல வழிபாட்டு தலைமுறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வருவதாக கூறி வந்தாலும் அவற்றை தொல்லியல் ரீதியில் உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 2000 ஆண்டுகளுக்கு மேம்பட்ட ஒரு சந்ததி தொடர்பினைக் கொண்டது ஏகநாதன் சித்தர் மடம்  கல்வெட்டு சான்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரே சித்தர் மரபாக உள்ளது.

 கந்து வழிபாடு :

  தமிழிக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தூண் தமிழர் மரபுப்படி அடிப்பகுதி நான்கு பக்கங்களும்,  அதன் மேற்புறத்தில் எண்பட்டைகளையும் கொண்ட லிங்க வழிபாட்டு முறையின் முன்னோடியான கந்து (கல்தூண்) வழிபாட்டு தூணாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

 கோட்டமும் சித்தர் மரபும் : 

 கோட்டம் என்ற சொல் கோவில்,  சொல்லுக்கு அரசன் வீடாகிய அரண்மனைதெய்வ வீடாகிய திருக்கோவில்துறவியர் தங்கும் மடம் ஆகிய பொருளுமுண்டு. கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்ற பொருளுடன்  புறநானூறு  299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் பற்றி குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில்  "சுடு மண்ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும்" (மணிமே.6:54 - 59) என்கிறது .

கோட்டமும் தமிழர் வழிபாடும் :

தமிழர் வழிபாட்டு முறை சார்ந்த பல்வேறு கருதுகோள்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தமிழர்களின் கட்டிடக்கலை மரபு குறித்து முறையான சான்றுகள்  ஏதுமின்றி இருந்த நிலையில் இந்த கல்வெட்டு கட்டிடக்கலை கட்டுமான மரபு சார்ந்த எண்ணங்களை மாற்றியமைக்கும். கோட்டம் என்ற சொல்லாடல் இலக்கியங்களில் கட்டுமானமாக பயின்று வருவதை இந்தக்கல்வெட்டு உறுதி செய்கிறது. மேலும் இதனை அடிப்படையாகக்கொண்டு தமிழகத்தின் பல இடப்பெயர்களை மீளாய்வு செய்ய இயலும் உதாரணமாக ஆதனக்கோட்டை என்ற ஊர் அங்கிருந்த ஆதன் கோட்டை என்றிருந்து பின்னாளில் மாறியிருக்கும் என நிறுவ முடியும். 

 ஆதன், நாதனது  ஆனது எப்படி  ?  

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் ஆதன் என்ற சொல் பயின்று வருகிறது. 

இதன் மூலம்  குழுவின் தலைவர் , மன்னன் இவர்களோடு கலைகளை கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என்று அழைக்கப்பட்டிருப்பது இக்கல்வெட்டு சான்றின் மூலம் உறுதியாகிறது.

       அதுமட்டுமின்றி இந்த கல்வெட்டில் சொல்லப்பட்ட ஏகன் ஆதன் கோட்டம் என்ற சொல்லாடல் பின்னாளில் ஏகநாதன் பள்ளிப்படை என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்று  மாறியிருப்பதையும் கருத்திற்கொண்டு  ஆதன் என்ற சொல்லாடலே தமிழ் இலக்கணப் பிணைப்பு விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது, என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

 

     இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் இன்னும் பிற கோவில்களின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ் சொற்களின் முன்னொட்டும் ஆதன் என்ற பின்னொட்டுடன் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

மதுரை மன்னன் சொக்கன் ஆதன்   

 சொக்கன் ஆதன் என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் சொக்கநாதன் என ஆகியிருக்கிறது என்றும் நாகன் ஆதன் என்ற பெயர் நாகநாதன் என்றும், கயிலாயன் ஆதன் கயிலாயநாதன் என்றும், ராமன் ஆதன் ராமநாதன் என்றும்,  இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவ முடியும்.

 

 எனவே தமிழ்மொழி வரலாற்றில் தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுவிட்டன என்பதற்கான சான்றாக இந்த கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஆதன் என்ற பெயரில் மன்னர்கள் 

           ஆதன் என்ற சொல் மன்னனனை குறிக்கும் சொல்லாக உள்ளது.  இந்த வழக்கம் சேரர்களிடையேயும் , பாண்டியர்களிடையேயும் உள்ளது.

  உதாரணமாக சேரல் ஆதன் சேரலாதன் என்றும் ,வாழி ஆதன் வாழியாதன் என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன்  என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாக கொள்ளலாம் .

    இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இது குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிப்பதோடு மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை மூலம்:.ஆனந்தன் அவர்களின் செய்தி குறிப்பு  

மேற்கோள்கள் : 

1.கிண்ணிமடம் தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு குறித்த நாளிதழ் செய்திகள் 

2.கொடுமணல் , கீழடி, அரிக்கமேடு, அகழ்வாய்வு முடிவுகள் 

கட்டுரையாளர்கள் :

ஆ.மணிகண்டன் , முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ் பலகலைக்கழகம் ,தஞ்சாவூர்.

வே.ராஜகுரு, முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்நாடு திறந்தநிலை பலகலைக்கழகம் ,சென்னை 



Saturday, June 13, 2020

Ilayathakkudi Nakarathaar’s contribution to Mallangudi Shiv Temple’s Thiruvolakka Mandap stone inscription found


         A 14th Century Stone inscription was found at Mallangudi (formerly known as malayalankudi) , Thirumayam (TK), Periyaiyur Village Union. The stone inscription was erected in the Pillayar Temple compus at Mallangudi, Umaiyaandi oorani (drinking water tank) Archeological Forum of puthukkottai ,identified a stone inscription, the team consisting of the founder A.Manikandan, the President Karu.Rajendren and the coordinator S. Kasthuri Rengan, M.M.Kannan had a field survey in this area and they had stumbled upon this stone inscription.

this type of Inscription is a very rare find for the inscription was intact, carved on a 2 1/4 feet high and 1 ¼ feet width stone slab, which is slightly slanted. The top portion of the slab is decorated with an arch, followed by 14 lines of inscription.

                                             

Period of the Inscription

 There is no specific mention of time in the inscription but the style of the letters inscribed indicates that it belongs to the latter part of the 14th century. Message in the inscription Thiruvolakka Mandap is a prayer hall where the idols of worship is kept for prayers.

The Lord shiva (Oru Poovukandharuliya Naayanaar)

This inscription mentions the main deity as “Oru Poovukandharuliya Naayanaar”, and a prayer hall 


was erected by a (kulasekarapuram) Ilayathakkudi Nagarathar, named Azhagiya thirusitrambalamudaiyan. He is also mentioned as his ancestrol native place Kazhanivasaludaiyan and his Current residence Thirukodungkundramudaiyaan, However, no sign of the Prayer hall mentioned in the inscription are found near it. Thirvolakkamandapam is refered in a verse in Thiruvasakam 21,6, it refers” to pray thiruvolakkam”, means God’s divinely court.

    The Nattukkottai Nagarathar Community often camped along various parts of the country, and spent their wealth for the social welfare causes such as erecting temples, digging ponds and establishing lakes.

The author expressed his gratitude to the volunteers of the village, Nadarajan, Subramaniyan, Students, Uthayakkumar, Dineshkumar, Ragul, Pichaimuthu, Santhosh Kumar, Rubini, and Shalini, who were very enthusiastic in locating and sharing the local legends with the team.


A.MANIKANDAN 

RESEARCH SCHOLAR

DEPARTMENT OF ANCIENT SCIENCE

TAMIL UNIVERSITY , THANJAVOOR,

TAMILNADU -STATE 

INDIA 

மல்லங்குடி சிவன்கோவிலுக்கு திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தகுடி நகரத்தார் கல்வெட்டு


மல்லங்குடி சிவன்கோவின் கல்வெட்டு  
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில்             பலகைக்கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது. 
இரண்டே கால் அடிஉயரத்துடனும் ஒன்னே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் மேல்புறத்தில் தோரணவாயில் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறிக்கப்பட்டுள்ள  கல்வெட்டானது 14 வரிகளுடன் உள்ளது.

கல்வெட்டின் காலம் :
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் கிராம ஊராட்சிக்குட் பட்ட மல்லங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை என்பதால் எழுத்தமைதியின் அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.
கல்வெட்டுச் செய்தி :
இதில் “  சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுகந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக் கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக்கொடுக்கப்பட்ட செய்தியை பகிர்கிறது.

ஒரு பூவுகந்தருளிய நாயனார்:
ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை காண முடியவில்லை அதுமட்டுமின்றி வழிபாட்டிலிருந்த எவ்வித சான்றுகளும் காணப்படவில்லை , என்றாலும் உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும் , வேல்களும் இக்கல்வெட்டு காணப்படும் இடத்தில் உள்ளது.
திருவோலக்க மண்டபம் :
திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசக (திருவா.21, 6) பாடல் வரிகள்   “ஏசா நிற்பர் என்னை உனக்கு , அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர் யான்தானும், பேணா நிற்பேன் நின்னருளே , தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே.  என்கிறது
அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின் திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது    கொலு மண்டபம், தர்பார் என்று பரவலாக அறியப்பட்டாலும், முற்கால வழிபாட்டு மரபில்  அத்தாணியிருப்பு மற்றும்  திருவோலக்க மண்டபம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
  அதாவது இறைவனாரின்  திருவுருவம் பக்தர்களின்  வழிபாட்டிற்காக ,  வைக்கப்படும் மண்டபம் என்பதால் திருச்சபை எனப்படும் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்படிருப்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. என்றாலும் இவ்விடத்தில் எவ்வித கட்டுமானங்களையும் காணமுடியவில்லை.
குலசேகரபுரம் எனும் இளையாத்தக்குடி நகரத்தார்களின் அறப்பணி 
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்தை பிரதானமாகக்கொண்டவர்கள், இவர்கள் வணிகத்திற்காக பல நாடுகளிலும் , பல  ஊர்களிலும்  தங்களது வசிப்பிடங்களை மாற்றி வசித்து வந்தாலும் தங்களது ஊர்ப்பெயரோடு கூடிய பெருந்தெரு எனப்பெயரிட்டு  அழைத்து வந்துள்ளதையும், பல இடங்களில் கோயில் திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள்  செய்துள்ளதை  பல்வேறு கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
    மலையாலங்குடி ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்றழைக்கப்பட்ட சிவாலயத்தில் திருவோலக்க  (திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி ஊரவரான கழனிவாசலுடையான் என்ற மூதாதையர் பெயரையும், திருக்கொடுங்குன்ற முடையான் என்ற வசிப்பிடத்தையும் பெயரோடு தாங்கிய ,  அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்பார் அமைத்துக்கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு கூறுகிறது. 
 இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஒருவரா ? அல்லது மூவரா என்ற ஒரு சிறு ஐயமும் எழுகிறது.  அது என்னவெனில் குலசேகரபுரத்து கழனிவாசலுடையான் ,திருக்கொடுங்குன்றமுடையான் திருச்சிற்றம்பலமுடையான் என வருவதால் தனித்தனி பெயராக இருக்கலாம் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். எனினும் மூத்த கல்வெட்டு அறிஞர் சு.இராஜகோபால் அவர்கள்  இது ஒருவருடைய பெயரே என்றும் மேற்சொன்ன விளக்கத்தையும் கட்டுரை ஆசிரியருக்கு தந்துள்ளார்.
ஒன்பது சிவாலயங்கலும் நகரத்தாரும்  
இளையாத்தக்குடி, மாத்தூர் , வைரவன்கோயில் , நேமம், இலுப்பைக்குடி, ,சூரக்குடி,  வேலங்குடி , இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள சிவன் கோவில்களை அடிப்படையாகக்கொண்டு ஒன்பது குழுக்களாக அறியப்படும் நகரத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, தங்கி வணிகம் செய்தாலும், தங்களை தங்களது ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை பல்வேறு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  
இவ்வகையில் தாம் இளையாத்தக்குடியிலிருந்த கழனிவாசல், திருக்கொடுங் குன்றம் எனும் பிரான்மலை , திருசிற்றம்பலம் ஆகிய தமது மூதாததையர் வாழ்ந்த ஊர்பெயர்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதற்கான  சான்றாக  இக்கல்வெட்டு அமைகிறது. 
இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பில் களப்பணியாற்றிய தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரெங்கன் ,உறுப்பினர் ம.மு.கண்ணன்  ஆகியோருக்கு நன்றி 
களப்பணியில் பங்கேற்று  உதவிய மல்லாங்குடியைச்சேர்ந்த  பெரியவர்கள் நடராஜன் ,சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் உதயகுமார், தினேஷ்குமார், ராகுல், பிச்சைமுத்து , சந்தோஷ் குமார் ,ரூபினி,  ஷாலினி ஆகியோருக்கும்
பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் 

கூடுதல் செய்தி : இந்த கல்வெட்டினை முழுமையாக வாசித்துவிட்டு அதிலுள்ள குறைகளை சுட்டி உதவிட தொல்லியல் அறிஞர் முனைவர்.சு.ராஜகோபால் அய்யாவிடம் கேட்டிருந்தோம் , அப்போது திருவோலக்க,  திருவேலுக்கு என்று வாசித்திருந்தேன். ஏனென்றால் துணை எழுத்து முழுமையாக இல்லை , அத்துடன் கோயிலில் இரும்பாலான வேல் கம்புகளும் அதிகமாக நடபட்டிருந்தது. மண்டபத்தின் அறிகுறிகளும் இல்லை என்பதால் இந்த வேல்களுக்கு ஒரு மண்டபம் அமைத்துக்கொடுத்திருக்க இயலுமோ என்று நினைத்திருந்த நிலையில் , துணை எழுத்து மறைந்திருக்கலாம் என்பதைக்கூறி தனது அனுபவ அறிவை எனக்கு தந்து உதவினார்கள். அய்யாவிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி 

எங்கள் தலைவர் அய்யா கரு.ராஜேந்திரன் அவர்களின் நகரத்தார் வரலாறு குறித்த தொடர் அனுபவப்பகிர்வும் இதற்கு பயனாக அமைந்தது.

கண்டுபிடிப்பு செய்தி பகிர்வு 
ஆ.மணிகண்டன் 
ஆய்வாளர் - தொல்லறிவியல் துறை 
நிறுவனர் - தொல்லியல் ஆய்வுக்கழகம் 
புதுக்கோட்டை 

kindly note the photograph from file

Saturday, February 22, 2020

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமக்கள் புழக்கத்தில் இருந்தது தமிழ்எண்களே ! இரண்டு தமிழ் எண் மைல் கற்கள் செங்கிப்பட்டியில் கண்டுபிடிப்பு


தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில், திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே பயணியர் விடுதியின் சுற்றுச்சுவரின் அருகே தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட இரண்டு மைல்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கல் கிடப்பதாக கந்தர்வகோட்டை ஒன்றியம் குரும்பூண்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலர் மூ.சேகர் அளித்த தகவலைத்தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன், தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் , ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் து.மணிசேகரன் ஆகியோரடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் திருச்சி, தஞ்சாவூர் இடையே 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சாலை மேம்பாட்டு பணியின் போது நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல் என அடையாளம் கண்டுள்ளனர்.

இது குறித்து தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் எமது குழுவினரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூழியான்விடுதி, ஆதனக்கோட்டை, அன்னவாசல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரி, தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளைநாயக்கன் பட்டி, செங்கிப்பட்டிகீரனூர் விலக்குச்சாலை ஆகிய இடங்களில் அடையாளம் கண்டுள்ளோம்,
தற்போது செங்கிப்பட்டியில் மேலும் இரண்டு மைல்கல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
மைல் கல் நடப்பட்ட காலம்
ஆங்கிலேயர் காலத்தில், திருச்சியிலிருந்து திருவெறும்பூர் வழியாக, தஞ்சாவூருக்கு செல்லும் ஏழாம் எண் சாலை,1849 ஆம் போடப்பட்டது என்றும், இது கப்பிச்சாலையாகவும், பாலத்துடனும், நல்ல நிலையில் இருந்ததாக லீவிஸ் மூர் என்ற ஆங்கிலேயர் 1878 ஆம் ஆண்டு ஜூன் 28 தேதியிட்ட மேனுவல் ஆப் தி திருச்சினாப்போளி டிஸ்டிரிக்ட்என்ற புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச்சான்றின் மூலம் மைல்கல் நடப்பட்ட ஆண்டை உறுதிசெய்ய முடிகிறது.

தமிழ் எண் மைல் கல் கல்வெட்டு
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு மைல்கற்களும் வெவ்வேறு இடங்களில் நடப்பட்டவைஎன்பதை பொறிக்கப்பட்டுள்ள தூரத்தை அடிப்படையாகக்கொண்டு உறுதி செய்ய முடிகிறது.
முதலாவது மைல் கல் தற்போதைய செங்கிப்பட்டி பிரதான நெடுஞ்சாலையிலும், இரண்டாவது மைல்கல் துவாக்குடி அருகேயும் நடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
முதலாவது மைல்கல்லில், தஞ்சாவூர் 16 என அரபு எண்ணிலும், ய௪ என்று தமிழ் எண்ணிலும் ,தொடர்ச்சியாக திருச்சினாப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)18 மைல் என்பதை, ய௮ என தமிழ் எண்ணுடனும் குறிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது மைல் கல்லில் தஞ்சாவூர் 21 என அரபு எண்ணிலும் ௨ய௧ என தமிழ் எண்ணிலும் ,திருச்சிநாபளி (திருச்சிராப்பள்ளி)13 என அரபு எண்ணிலும், ய௩ தமிழ் எண்ணிலும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கல்வெட்டிலும் முதலாவதாக ஆங்கிலத்தில் ஊர்ப்பெயரும் , அதன் கீழே அரபு எண்ணில் தூரமும், இரண்டாவதாக தமிழ் எழுத்தில் ஊர்ப்பெயரும் அதன் கீழே தமிழ் எண்ணில் தூரமும் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டில், எந்தக்காலம் வரை பயன்பாட்டில் இருந்தது, என்பதற்கான முக்கியத்துவமான சான்றாக உள்ளது.

தமிழ் எண் மைல்கல் ஆய்வு

எமது குழுவினரால்மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மைல்கல் கல்வெட்டில், ஆதனக்கோட்டை ய௬அதாவது 16 மைல் என்றும், தஞ்சை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆதனக்கோட்டை ௧௪ அதாவது 14 மைல் என்றும் தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வருபவர்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் நடப்பட்டுள்ளதை உறுதிசெய்தோம்.
தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களின் எழுத்தமைதி எழுத்துருக்கள், ஒருபக்கம் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள தன்மை , கல்லின் வடிவம் ஆகியவற்றை ஒப்புநோக்கும்போது இம்மைல்கற்கள் ஒரே காலத்திலானவை என்றும்,தஞ்சையில் தமிழ் மற்றும் அரபு எண்களும், புதுக்கோட்டையில் தமிழ் மற்றும் ரோமன் எண்களும், இருப்பது
நோக்கத்தக்கது.
இதன் மூலம் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் ரோமன் எண்கள் அலுவலக பயன்பாடுகளில் முதன்மை பெற்றிருந்ததும், தஞ்சை, திருச்சி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் அரபு எண்கள் முன்னிலைப் பெற்றிருந்திருப்பதையும், அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் எண்களின் பயன்பாடும் வீழ்ச்சியும்
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ரோமன் மற்றும் அரபிய எண்கள் வெளிநாட்டவருக்கான எண்ணாகவும், மக்கள் பயன்பாட்டில்தமிழ் எண்கள் மட்டுமே இருந்துள்ளதை வெளிப்படுத்தும் மிக முக்கியமான தொல்லியல் சான்றாக, தமிழ் எண் மைல்கல்  கல்வெட்டுகள் உள்ளன. தமிழ் எண்கள் சமீப காலமாகத்தான்மக்கள்பயன்பாட்டிலிருந்துவழக்கொழிந்து போயிருக்கிறது  என்பதை உணர முடிகிறது,என்றார்.



தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....